இந்தி படித்தால் டீ அடிக்கவும், சால்னா விற்கவும்தான் முடியும் என மும்மொழிக் கொள்கை குறித்து அமைச்சர் பொன்முடி விமர்சனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் அரசு கலை அறிவியல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு 210 பேருக்கு இளநிலை பட்டங்களை வழங்கி பேசிய அமைச்சர், மாணவர்கள் சுயமாக தொழில் நிறுவனங்களை தொடங்கும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.