Also Watch
Read this
By: Manigandan Raja

சீமான், நடிகர் விஜய் ஆகியோர் வலிமை பெற்றால், அது பா.ஜ.க. மற்றும் R.S.S அமைப்புக்கு வலிமை சேர்ப்பதாகவே அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் அம்பேத்கர் படிப்பகம், விசுவகுடி மற்றும் வெங்கலம் கிராமத்தில் அம்பேத்கரின் உருவ சிலைகளை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், சினிமா மோகத்தில் விஜய்யின் பக்கமும், தமிழில் பேசுவதற்காக சீமான் பக்கமும் செல்லும் முன்பு இளைய தலைமுறையினர் நன்கு புரிதலை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved