news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காக்கி சட்டைய நிச்சயம் போடுவேன் ஆட்டோ ஓட்டுநரா இல்ல, போலிஸா...
tv

Also Watch

tv

Read this

காக்கி சட்டைய நிச்சயம் போடுவேன் ஆட்டோ ஓட்டுநரா இல்ல, போலிஸா...

திருவாரூர்

99

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tvr 3(3)

ஆட்டோ உரிமையாளரான மாவட்டத்தின் முதல் பழங்குடியின இளம்பெண். ஓட்டுநர் காக்கி சட்டையை கழற்றி விட்டு காவலர் காக்கி சட்டை அணிய வேண்டும் என முயற்சித்து வரும் சிங்க பெண்ணின் பயணம்.

வறுமை சூழல் காரணமாக நின்ற படிப்பு
திருவாரூர் நகரத்திற்குட்பட்ட ஆண்டித் தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் தேவேந்திரன் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்ளுக்கு திருமணம் ஆன நிலையில் மூன்றாவது மகள் திவ்யா வயது 23 என்பவர் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த விட்டு மேற்கொண்டு படிப்பதற்கு குடும்ப வறுமை சூழல் காரணமாக இருந்ததால் டைலர் கடையில் மூன்று வருடங்கள் பணிபுரிந்து வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காத காரணத்தினால் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு மாவட்ட தொழில் மையத்தில் ஒரு லட்சம் ரூபாய் மானிய கடன் பெற்று மாதத் தவணையில் ஆட்டோ ஒன்றை வாங்கி அவராகவே கற்றுக்கொண்டு அதனை ஓட்டி வருமானம் ஈட்டி குடும்பத்தை காப்பாற்உவதுடன், தனது தந்தைக்கு உறுதுணையாக இருந்து தனது 2 சகோதரிகளின் திருமணத்திற்கும் உதவியுள்ளார்.

பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர்
திருவாரூர் மாவட்டத்தில் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநராகவும், உரிமையாளராகவும் திவ்யா இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்த போதிலும் தான் காவலர் ஆக வேண்டும் என்கிற லட்சியத்துடன் கடந்த மூன்று வருடங்களாக காவலர் தேர்வு எழுதி வருகிறார். உரிய பயிற்சி மையத்தில் சேர்ந்து படிப்பதற்கு குடும்ப சூழல் காரணமாக வழியில்லாத காரணத்தினாலும் வறுமை காரணத்தினாலும் தானாக காவலர் தேர்வுக்கு ஓய்வு நேரத்தில் படித்து தயாராகி வருகிறார்.ஆரம்பத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளான திவ்யா தற்போது தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஒட்டி மாதம் 7,200 ரூபாய் மாத தவணை செலுத்துவதுடன் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறார்.

காவலர் காக்கி சட்டையை போட வேண்டும்
இது குறித்து திவ்யா கூறுகையில் சிறு வயதிலிருந்து காவலராக வேண்டும் என்பது எனது ஆசையாக இருக்கிறது. இருந்த போதிலும் குடும்ப சூழல் காரணமாக ஓட்டி வருகிறேன். ஆரம்பத்தில் என்னை பலர் எள்ளி நகையாடிய போதும் மனம் தளராமல் ஆட்டோ ஓட்டுகிறேன். ஆனால் தற்போது எனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.எனது இரு அக்காவின் திருமணத்திற்கும் நான் உதவியுள்ளேன்.என் தந்தை தான் எனக்கு முழு ஊக்கமளித்தார். பெண்கள் வீட்டில் இல்லாமல் தனக்கு பிடித்த எந்த வேலையையும் செய்ய முன்வர வேண்டும்.எனக்கு இந்த காக்கி சட்டையை கழற்றிவிட்டு காவலர் காக்கி சட்டையை போட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்காக உழைத்து வருகிறேன். நான் காவலரானாலும் எனது ஆட்டோவை ஒரு பெண் ஓட்டுனரை வைத்து தான் இயக்குவேன் என்று தன்னம்பிக்கை துளிர்க்க பேசினார்.

மகளிர் தினத்தின் ரியல் இன்ஸ்பிரேஷன்
இன்றைய காலகட்டத்தில் தேர்வ தோல்வி போன்ற சிறிய மன அழுத்தத்திற்கே விபரீத முடிவை எடுக்கும் இளைய தலைமுறைகளுக்கு மத்தியில் திவ்யா பன்னிரண்டாம் வகுப்பு படித்திருந்த போதும் சொந்தமாக ஆட்டோ வாங்கி அதில் வருமானம் ஈட்டி வந்தாலும் தனது லட்சியமான காவலர் தேர்வுக்கும் தயாராகி வருகிறார். 12-ம் வகுப்பு தான் படித்துள்ளோம் என்று முடங்கி வீட்டில் இருந்து விடாமல் சரசாரி பெண்களை போல் திருமணம் செய்து கொண்டு சென்று விடாமல் ஆண்களுக்கு நிகராக வருமானம் ஈட்டி தனது தாய் தந்தை மற்றும் சகோதரிகளுக்கு உதவியாக இருப்பதுடன் தானும் தனது காவலராக வேண்டும் என்று முயற்சித்து வரும் திவ்யா மகளிர் தினத்தின் ரியல் இன்ஸ்பிரேஷன் என்று சொன்னால் மிகையாகாது.

Related Link
ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு

ஓபிஎஸ்-க்கு நரம்பில்லாத நாக்கு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
10 hrs 59 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved