Also Watch
Read this
By: Web Team

கார் விபத்து நிகழ்ந்த போது தாம் தூங்கி கொண்டிருந்ததாகவும், விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்கள் குல்லா அணிந்திருந்ததை வைத்தே தாம் அப்படி பேசியதாகவும் மதுரை ஆதீனம் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருக்கிறார்.
தன்னை கொலை செய்வதற்கு குல்லா அணிந்தவர்கள் சதி திட்டம் தீட்டியதாக மதுரை ஆதீனம் பேசிய விவகாரம் தொடர்பாக அவரிடம், சென்னை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
உடல்நிலை காரணமாக படுத்துக்கொண்டே போலீஸ் கேள்விகளுக்கு பதிலளித்த ஆதீனம், தாம் எதுவும் தவறாக பேசவில்லை என கூறியுள்ளார்.
விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பித்து, மீண்டும் அவரிடம் விசாரணை நடத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved