news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பெரம்பூரில் விஜய்க்கு ஓட்டு கிடைக்குமா என தெரியாது
tv

Also Watch

tv

Read this

பெரம்பூரில் விஜய்க்கு ஓட்டு கிடைக்குமா என தெரியாது

கொடுங்கையூர், சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தவெக  விஜய்

விஜய்க்கு ஓட்டு கிடைக்குமா என தெரியாது :

சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் முடிவு செய்யப்பட்டு யார் யாருக்கு எந்தெந்த இடங்கள் என்பது தெளிவாகி இருக்கிறது. இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் வேட்பாளராக நிற்கிறார்.

விஜய் கிறிஸ்தவர் என்பதால் உங்கள் ஆதரவு , சிறுபான்மையினர் ஓட்டுக்கள் விஜய்க்கு செல்லுமா என்று சிலர், என்னிடம் கேட்டார்கள். பெரம்பூரில் விஜய் நின்றாலும் அவருக்கு ஓட்டு போடுவார்களா என்று தெரியாது. ஆனால் விஜய் பெயரளவில் மட்டும் கிறிஸ்தவனாக இருந்தால் மட்டும் போதாது.

அவருடைய செயல்பாடுகள், வாழ்வியல் மட்டும் செயல்பாடுகளிலும் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் என்றும், மதத்தினால் பிரிவினை ஏற்படுத்தாத, மதச்சார்பற்ற கட்சிகளுக்கு தான் சிறுபான்மையினர் ஆதரவு கொடுப்பார்கள் என்றும் கூறினார்.

விஜய் இதுவரை அரசியல் சார்ந்த எந்த விஷயங்களிலும், அரசியல் போராட்டங்களிலும் ஈடுபடாதவர். சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர். அவர்கள் எப்படி தமிழ் மக்கள் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்?

மத்தியில் இருக்கும் பாஜக, தமிழ் நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் தமிழ் மொழிக்கும் துரோகம் செய்து கொண்டே இருக்கிறது. இறந்து போன சமஸ்கிருதத்திற்கு ஆயிரம் கோடிகளை கொட்டி கொடுப்பவர்கள், ஆதி காலத்திலிருந்து கலாச்சாரத்திற்கு வித்திட்ட தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் அவர்கள் கொடுக்க தயங்குகிறார்கள்?

அவர்களை தமிழ்நாட்டில் எப்படி தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்? அவர்களுடன் இருப்பவர்களும் அவர்களுக்கு அடிமையாக இருப்பவர்களும் தமிழ் மக்களிடம் ஆதரவு கேட்பது நியாயமற்ற ஒன்று.

விஜய் பெரம்பூரை தேர்வு செய்ய காரணம், சிறுபான்மையினர் ஓட்டுக்களை நம்பி தான்.கிறிஸ்தவர்கள் மதத்தை பார்த்து மட்டும் ஓட்டு போட மாட்டார்கள். பெரும்பாலும் படித்தவர்கள். பகுத்தறிந்து தான் அவர்கள் ஓட்டுகளை போடுவார்கள். மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளரை போல விஜய் களத்திற்கு வந்து பிரச்சாரம் செய்வாரா? என்றும் தெரியவில்லை.

அரசியல்வாதியாக இன்னும் விஜய் மாறவில்லை. சினிமா உலகத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார்.

விஜய் நிற்கும் தொகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும். திருச்சி கிழக்கிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார். அங்கு இனிகோ இருதயராஜ் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரும் போட்டியிடுகிறார். யாருக்கு வெற்றி என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.

இந்த தேர்தலில் எங்கள் ஆதரவு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு தான். இந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை செய்து இருக்கிறார். நிச்சயமாக தமிழ் மக்கள் அவருக்கு தான் ஆதரவை கொடுப்பார்கள்.
இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆளுமையாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இருக்கிறார். அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தை நல்லபடியாக வழிநடத்துவார்.

ஒவ்வொரு ஆண்டும் வரி ஏற்றுவது தேவையற்ற ஒன்று தான். அதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றும், மத்திய அரசுக்கு எதிராக, எந்தப் பிரச்சனையிலும் விஜய் குரல் கொடுக்கவில்லை என்றும்,
பாஜக உடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இருப்பதாக அண்மையில் வந்த செய்திகளும் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது என்று கூறினார்.

Related Link
கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை எனப் புகார்

கடந்த 40 நாட்களாக குடிநீர் வரவில்லை எனப் புகார்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதன்முதலாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடக்கம்

0
41 mins agoshare
தூத்துக்குடி இரவு விமானம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved