Also Watch
Read this
By: Manigandan Raja

இரவு நேர பயணிகள் விமான சேவை தொடக்கம் :
தூத்துக்குடியில் சுமார் 452 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலையம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26ம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது இந்த விமான நிலையம்2044 ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட தக்க வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதில் 1350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரத்தி 115 மீட்டர் நீள ஓடுதளமாக மாறப்பட்டு உள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், இரவு நேரத்தில் விமானம் வந்து செல்லக்கூடிய
வகையில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .
மேலும் பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் மிகப்பெரிய ஏ - 321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு வந்து செல்ல முடியும். இதனால் தூத்துக்குடி சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது விரைவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டெல்லி மும்பை கொச்சி கொழும்பு மலேசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து தினமும் சென்னைக்கு நான்கு விமான சேவைகளும் பெங்களூருக்கு ஒரு விமான சேவை என ஐந்து விமான சேவைகள் தனியார் விமானங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன இதைத்தொடர்ந்து இன்று மார்ச் 29ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து மாலை 6:15 மணிக்கு புறப்படும் விமானம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இரவு 7 55 மணிக்கு வந்தது பின்னர்.
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இரவு 8-15 மணிக்கு புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு சென்னை விமான நிலையம் சென்றடைகிறது இதை எடுத்து இரவு நேர விமான சேவையில் முதன் முதலாக பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கு விமான நிலைய சார்பில் விமான நிலைய ஊழியர்கள் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு அளித்தனர் இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பயணிகளுடன் சேர்ந்து விமான நிலைய இயக்குனர் தலைமையில் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியில் இருந்து இரவு நேர விமான சேவை துவங்கப்பட்டது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர் இன்றைய தினம் முதல் இரவு நேர விமான சேவையை விமானம் முழுவதும் டிக்கெட் புக்கிங் ஆகி சென்னையில் இருந்து 78 பயணிகளும் தூத்துக்குடியில் இருந்து 78 பயணிகளும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் எனவும் விமான பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved