news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுற்றுலா சென்றவர்களின் கார் கவிழ்ந்து விபத்து
tv

Also Watch

tv

Read this

சுற்றுலா சென்றவர்களின் கார் கவிழ்ந்து விபத்து

கொடைக்கானல், திண்டுக்கல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
கொடைக்கானல் கார் விபத்து

கார் கவிழ்ந்து விபத்து :

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு திருவாரூர் பகுதியில் இருந்து ரியாஜ் அகமது, முகமது கைப் மற்றும் அவருடைய நண்பர்கள் உட்பட மூட்டம் ஆறு பேர் நேற்று இரவு கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்ததாக கூறப்படுகிறது.

சுற்றுலா வந்த இளைஞர்கள் தங்குவதற்கு கூக்கால் சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் பிரதான சாலையில் பழனி வியூ அருகே வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுமார் 300 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த திருவாரூரை சேர்ந்த ஆறு பேரும் காரின் இடுப்பாடிக்கும் சிக்கியதில் காரில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மேலும் கார் 300 அடி பள்ளத்தில் விழுந்த காரணத்தால் அப்பகுதி மக்கள் இளைஞர்களை மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் காரில் மாட்டிய இளைஞர் நான்கு பேரை பள்ளத்திலிருந்து கயிறு மற்றும் கிராம மக்கள் உதவியுடன் மீட்டெடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் காரினுள் இருக்கும் மற்றொரு இளைஞர் மற்றும் உயிரிழந்த இளைஞரை மீட்கும் பணியில் தீயணைப்பு பணியினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்ட பகுதியில் முறையான தடுப்பு சுவர் இல்லாத காரணத்தினால் இது போன்ற விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Link
பாரம் தாங்காமல் மின் தூக்கி பாதியில் நின்றது

பாரம் தாங்காமல் மின் தூக்கி பாதியில் நின்றது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதன்முதலாக இரவு நேர பயணிகள் விமான சேவை தொடக்கம்

0
1 hr 5 mins agoshare
தூத்துக்குடி இரவு விமானம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved