திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் மருத்துவமனை மூடப்பட்டதால் மருத்துவம் பார்க்க முடியாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதி அடைந்துள்ளனர். எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்தது போல் தங்கள் தேயிலை தோட்ட பகுதியையும் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.