தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள பழமைவாய்ந்த புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், கிறிஸ்தவர்களின் புனித நாளான புனித வெள்ளிக்கு முதல் நாளான வியாழக்கிழமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. ஆலயத்தின் பங்குதந்தைகள், சீடர்களாக அமர்ந்திருந்த முதியவர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு புத்தாடை மட்டும் இனிப்புகளை வழங்கி வழிபட்டனர்.