சென்னையை கலக்கும் கோவை பையன் ஹிப் ஹாப் தமிழா ஆதி, ஆல்பம் பாடல்கள் மூலம் தனது பயணத்தை தொடர்ந்து விடாமுயற்சியால் இன்று தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்.இந்நிலையில், சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பில் தேசிய அளவிலான ஐந்தாவது ஸ்கெட்ச் அப் மாணவர்கள் திறன் விழாவில் கலந்து கொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி இன்னும் இரண்டு வருடங்களில் தான் நாவல் எழுதி வெளியிடுவதாக மாணவர்களிடம் கூறினார். நமது கையில் தான் செல்போன் இருக்க வேண்டும் செல்போன் கையில் நாம் இருக்கக் கூடாது என்று மாணவர்களுக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிவுரை கூறி இருக்கிறார் .இந்நிகழ்ச்சியில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று கட்டடக்கலை துறை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் நடந்த 28 வகையான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. விழா மேடையில் பாட்டுப்பாடி மாணவ மாணவிகளை உற்சாகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கியும் ஊக்கப்படுத்தினார்..