செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே இரு பைக்குகள் மீது அடுத்துடுத்து இரு கனரக வாகனங்கள் மோதியதில், இளைஞர்கள் இருவர் படுகாயம் அடைந்தனர். சித்தாமூர் -செய்யூர் செல்லும் சாலையில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் கனரக வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.