விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வன்னியம்பட்டி, மம்சாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நின்றதால் அவதிக்குள்ளான பொதுமக்கள், மழைநீர் வடிகால்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.