தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யாவாடி கிராமத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள், இன்னும் சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முறிந்தன.