Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பெய்த கனமழையால் சுமார் 120 ஏக்கரில் பயிரிடப்பட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதமடைந்தன.
கோகிலாபுரம் பகுதியில் முதல் போகம் முடிந்து இரண்டாம் போகம் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்ததால் 40மூட்டை நெல் வரக்கூடிய வயலில் 10மூட்டை மட்டுமே வரும் நிலை உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
ஏக்கருக்கு 45ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved