மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் Fastag -ல் பணம் இல்லை எனக்கூறி அரசு பேருந்துகளை சுங்கச்சாவடி ஊழியர்கள் திருப்பி அனுப்பியதால் பயணிகள் அவதியடைந்தனர். மதுரையில் இருந்து திருநெல்வேலி மார்க்கமாக சென்ற அரசு சிறப்பு பேருந்துகள் கப்பலூர் சுங்கச் சாவடியில் ஸ்கேன் செய்தபோது Fastag -ல் பணம் இல்லை எனக்கூறி ஊழியர்கள் பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திருநெல்வேலி மார்க்கமாக செல்லவிருந்த பத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டு சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் திருமங்கலத்தை சுற்றி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.