கொடைக்கானலில் அரசு வருவாய் நிலம் மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரம், செடி, கொடிகள் தீப்பிடித்ததால், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புலியூர் மலைப்பகுதியில் உள்ள நிலங்களில் மரம், செடி, கொடிகள் திடீரென தீப்பிடித்து எரிவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.