சிவகங்கை மறை மாவட்ட ஆயர் இல்லத்தில் போலி கணக்குகளை காண்பித்து, 25 லட்ச ரூபாய் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை பிரிட்டோ நகரில் அமைந்துள்ள சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மறை மாவட்ட ஆயர் இல்லத்தில், மானாமதுரையை சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த 2019 முதல் கணக்கராக பணிபுரிந்து வந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் எழவே, பொருளாளர் ஆரோக்கியசாமி ஆயர் இல்ல வங்கிக் கணக்குகளை ஆராய்ந்து பார்த்த போது, கணக்கர் பிரவீன் போலியாக கணக்கு காண்பித்து 25 லட்சத்தை மோசடி செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து புகாரளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரவீனை கைது செய்தனர்.