Also Watch
Read this
Posted on: Apr 24, 2025 01:51 PM
By: Srini Vasan

கனமழை காரணமாக குமரி மாவட்டம் உலக்கை அருவி பகுதியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பெருந்தலை காடு பகுதியில் கரையோரம் பயிரிடப்பட்டிருந்த அனைத்து வாழை மரங்களும் சாய்ந்தன.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பரவலாக அனைத்து பகுதிகளிலும் பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான பெருந்தலை காடு, கடுக்கரை, காட்டுப்புதூர், கீரிப்பாறை, உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved