புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தடையை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமாகிய 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர். காற்று வேகமாக வீசுவதால் கடலுக்கு செல்ல வேண்டாம் என விடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை மீறி, பொன்னகரம் கிராமத்திலிருந்து மூர்த்தி, மணிகண்டன், நாயகம், மணி ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எரிப்பொருள் தீர்ந்து நடுக்கடலில் தத்தளிப்பதாக வந்த தகவலையடுத்து சக மீனவர்கள் தேடி சென்றனர். அப்போதும் கிடைக்காததால் கடலோர பாதுகாப்பு குழுவினர் தேடியநிலையில் அவர்கள் 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீட்கப்பட்டனர்.இதையும் படியுங்கள் : கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு