விருதுநகர் அருகே கோவில் புலி குத்தி பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 6 பேர் படுகாயம் அடைந்தனர். மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான ஆலையில், வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன.