தென்காசி மாவட்டம் பச்சைநாயகன் பொத்தை மலைப் பகுதியில் பற்றி எரியும் காட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மாலை 6 மணிக்கு எரிய தொடங்கிய காட்டு தீயானது வேகமாக பரவி வருவதால் விலங்குகள் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. கொழுந்து விட்டு எரியும் தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.