மின்கசிவு காரணமாக தீ விபத்து : சென்னை புழல் புத்தகரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருபவர் விஜயகுமார் இவர் இந்த பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக இந்த மளிகை கடை நடத்தி வருவதாக தெரிகிறது. நிலையில் வழக்கம் போல விஜயகுமார் கடையை திறப்பதற்காக இன்று காலை கடையைத் திறந்த பொழுது குளிர்சாதன பெட்டியில் இருந்து புகை வருவதை கண்டு திடீரென அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து குளிர்சாதன மின்சார இணைப்பினை அவர் துண்டிக்க முற்பட்டு குளிர்சாதன பெட்டியின் மின் இணைப்பு ப்ளக் ஐ அவர் கழட்டுவதற்கு முயற்சி செய்தபோது குளிர்சாதன பெட்டியில் இருந்து திடீரென மளமளவெனத்தை பற்றி எரியத் துவங்கியது. தீயானது மளிகை கடை முழுவதும் பரவி மளிகை கடை முழுவதும் தீப்பிடித்து எரியத் துவங்கியது இதனால் செய்வது அறியாமல் திகைத்த விஜயகுமார் இது குறித்து உடனடியாக சென்னை அவசர காவல் கட்டுப்பாட்டு துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இந்த தகவல் ஆனது சென்னை அம்பத்தூர் தீயணைப்பு நிலையம் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கடை முழுவதும் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இந்த கடையில் சுமார் 5 லட்சத்திற்கு மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் விஜயகுமாரின் வீட்டு சொத்து ஆவணங்கள் மற்றும் அவருடைய பாஸ்போர்ட் உள்ளிட்டவையும் இந்த தீ விபத்தில் எரிந்து நாசனமானதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து சென்னை புழல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Related Link மறியலில் ஈடுப்பட்ட விவசாயிகளை கைது செய்த போலீசார்