திருவாரூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 1,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த எள் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருத்துறைப்பூண்டி அடுத்த கொருக்கை ஊராட்சியில், மேல கொருக்கை, சேவியக்காடு, கண்ணன்மேடு, தலைக்காடு, கீழக்கரை உள்ளிட்ட 8 கிராமங்களில் சுமார் 1500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் எள் சாகுபடி செய்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால், 40 நாட்கள் ஆன எள் பயிர்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், வேளாண் துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.