திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் முன்பு தரையில் படுத்து விவசாயி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நின்று கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீடு வழங்குவதில்லை எனவும், உழவர் செயலி மூலம் பதிவு செய்வது விவசாயிகளுக்கு கடினமாக உள்ளதாகவும் புகார் தெரிவித்தனர்.