திருவாரூர் அருகே வெண்ணாற்றில் இருந்து பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீர் பாயாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் அரிச்சந்திரபுரம், அன்னுகுடி, கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நேரடி விதைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வெண்ணாற்றில் குறைந்தளவு தண்ணீர் செல்வதால், பாசன வாய்க்காலில் தண்ணீர் வராமல் நெற்பயிர்கள் கருகும் நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் ஏக்கருக்கு உழவு அடிப்பதற்கு 3,600 ரூபாய் மற்றும் விதை நெல்லுக்கு 1,600 ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறும் விவசாயிகள், வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.