news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்கன்வாடி மையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு
tv

Also Watch

tv

Read this

அங்கன்வாடி மையத்தில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு

தூத்துக்குடி

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TTN Anganwadi

பெயர்ந்து விழுந்த மேற்கூரை பூச்சு : 

தூத்துக்குடி சின்ன கண்ணு புரத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது இந்த அங்கன்வாடி மையம் கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டமன்ற
உறுப்பினர் செல்ல பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது இந்த அங்கன்வாடி மையத்தில் அந்த பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை காரணமாக அங்கன்வாடி மையங்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது

இந்நிலையில் இன்று காலை அங்கன்வாடி மைய ஊழியர் அங்கன்வாடி மையத்தை வழக்கம்போல திறந்திருக்கிறார் அப்போது நேற்று இரவு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்து இருந்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து அங்கன்வாடி மைய ஊழியர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு பூட்டு போட்டு விடுமுறை அளிக்கப்பட்டது இந்த அங்கன்வாடி மையத்தில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வரும் நிலையில் மேற்கூரை குழந்தைகள் இல்லாத நேரத்தில் இடிந்து விழுந்ததால் குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சொந்த தொகுதியிலேயே அங்கன்வாடி மையம் முறையாக பராமரிப்பு மேற்கொள்ளாததால் மேற்கூரை இடிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
அடங்கல் இல்லாமல் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை

அடங்கல் இல்லாமல் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
1 hr 8 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved