திண்டுக்கலில் உணவகங்களில் வசூல் செய்து வந்த போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார். மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் பிரியாணி கடை உரிமையாளரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அந்த நபர், உணவகம் அருகில் நிற்பதாகவும் வாகனத்திற்கு டீசல் நிரப்ப 500 ரூபாயை டிரைவரிடம் கொடுத்தனுப்புமாறும் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக பிடிபட்டார்.