Also Watch
Read this
By: Manigandan Raja
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில், சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான மாணவ மாணவியர் பாரம்பரிய உடையான வேட்டி சேலை அணிந்து பங்கேற்று ஆடிப் பாடி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இதில், நடிகர் விஜய் பாடல் வந்தவுடன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் துள்ளி குதித்து ஆடியது, மாணவர்களை உற்சாகபடுத்தியது.

கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா
செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் பகுதியில் இயங்கி வரும் அக்னி தனியார் பொறியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் வேட்டி, சேலை அணிந்து வந்து செங்கரும்பு வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து குலவையிட்டு மகிழ்ந்து ஒருவருக்கு ஒருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்
இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற பல்வேறு விதமான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, பொங்கல் வைத்தல், கோலம்போடுதல், கயிறு இழுத்தல், போன்ற போட்டிகளும் நடைபெற்றது. அப்போது தப்பாட்டம் மற்றும் குத்து பாடலுக்கு மாணவ மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர்.

துள்ளிக்குதித்து நடனம்
அப்போது, விஜய் பாடல் வந்தவுடன் கல்லூரி பேராசிரியர் ஒருவர் துள்ளி குதித்து ஆடிய காட்சி மாணவர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved