news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடும் நயன்தாரா
tv

Also Watch

tv

Read this

குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடும் நயன்தாரா

Nayanthara

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
சினிமா செய்திகள் 2

தனுஷின் 'கர' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் :

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை சென்னை நேரு அரங்கில் நடைபெறுகிறது. இந்த திரைப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

குடும்பத்துடன் ஜாலியாக நேரத்தை செலவிடும் நயன்தாரா :

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். போட்டோக்களுக்கு லைக் செய்த ரசிகர்கள் பலரும், மகிழ்ச்சியான குடும்பம் என கமெண்ட் செய்து வருகின்றனர். நயன்தாரா தற்போது விஷ்ணு இடவன்((Vishnu Edavan)) இயக்கத்தில் கவினுடன் இணைந்து 'HI' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சூர்யா - ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள "கருப்பு" :

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள "கருப்பு" திரைப்படம், பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், தற்போது மே 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 ஓடிடி உரிமையை வாங்கிய அமேசான் பிரைம் :

நெல்சன்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர்-2 திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் திரைப்படத்தை வெளியிட படக்குழு முயற்சித்து வருகிறது. முன்னதாக 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தை இதே நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது.

Related Link
துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை

துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு அறுவைச் சிகிச்சை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

0
30 mins agoshare
Minister Masu








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved