news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்
tv

Also Watch

tv

Read this

திமுக வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் பிரச்சாரம்

சைதாப்பேட்டை, சென்னை

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Minister Masu

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற இன்னும் நான்கு நாட்கள் உள்ள நிலையில் இறுதி கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சைதாப்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரும் அமைச்சருமான மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே உள்ள திடீர் நகரில் பகுதியில் திறந்தவெளி வாகனம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

சைதாப்பேட்டை வேட்பாளர் மாசுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பு: 

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஸ்டாலின் அலை வீசி வருகிறது. சைதாப்பேட்டையில்கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை தமிழ்நாட்டிலேயே மிக சிறப்பான மருத்துவமனை, தமிழ்நாட்டின் அடையாளமாக இருக்கிறது.

அதேபோல, ரேஸ்கோர்சில் அமைய உள்ள சுற்றுச்சூழல் பூங்கா வருங்காலத்தில் மிக பெரிய சுற்றுச்சூழல் பூங்கா எங்கே இருக்கிறது என்று கேட்டால் அது சைதாப்பேட்டையில் தான் இருக்கிறது என்ற பெருமையை சேர்க்கும் என்றார்.

அடையாறு ஆற்றை ஆளப்படுத்திய அழகுப்படுத்த 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் கரையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு இங்கேயே மறுக்குடி அமர்வு செய்வதற்கு சைதாப்பேட்டையில் 1700 குடியிருப்புகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை எதிரில் இருக்கக்கூடிய பகுதியில் அமைய இருக்கிறது என்றார்.

Related Link
அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்

அசிங்கமா போயிடும், நடமாட முடியாது - இபிஎஸ்




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 3 பேர் கைது

2
8 hrs 45 mins agoshare
லாட்டரி விற்பனை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved