Also Watch
Read this
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தியும், அடுத்தவரின் மரணத்தை எதிர்பார்த்து பேசுவதையும் கடமையாக வைத்திருப்பதாகவும், சாக்கடைக்கு சரி சமமான வார்த்தைகள் பேசும் அவருக்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்றதுக்கு எல்லாம் வாய் கிழிய பேசும் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அட்டூழியத்தை கேள்வி கேட்காமல் சைலண்ட் மோடுக்கு சென்று விடுவதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

ராமநாதபுரத்தில் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
திறமையான நிர்வாகத்தால், நிதி நிலைமையை மீட்டெடுத்திருக்கிறோம். அதன் பயனாக நாட்டிலேயே முதல் மாநிலமாக 11.01 சதவீத பொருளாதார வளர்ச்சியை கொண்டு வந்திருக்கிறோம்.

மகளிர் விடியல் பயணத்துக்கான பேருந்துகளை, திராவிட மாடல் ஆட்சியில் அதிகரிக்கப் போகிறோம். மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயரப் போகிறது. புதுமைப் பெண் திட்டத்தில் ரூ.1,500 ஆக உயரப் போகிறது. இல்லத்தரசிகளுக்கு ரு.8,000 கூப்பன் வழங்கப்பட உள்ளது.

மீனவர்கள் விவகாரம்
உக்ரைன் போரை நிறுத்தி விட்டேன், அமெரிக்காவை அலற விட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் விஸ்வகுரு பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையுடன் மீனவர் பிரச்சினை குறித்து பேசச் சொன்னால் மவுன குரு ஆகி விடுகிறார். தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைத்திருந்தால் இப்படி அல்லல்பட விட்டிருப்பாரா? சென்னையில் ஓய்வு பெற்ற நீதி அரசர் அரிபரந்தாமன், ’ஜீரோ பிஜேபி’ என்ற இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். இதைத் தொடங்கி வைத்தவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர்.

ஐபிஎல் போட்டி
பாஜக அமைச்சர்கள் தொடர்ந்து மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்க வேண்டும் என்று பேசுகிறார்கள். இதை ஒரு நாளாவது பழனிசாமி கண்டித்திருக்கிறாரா? பொது சிவில் சட்டம் குறித்து பழனிசாமியின் நிலைப்பாடு என்ன?

அதிமுகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் பாஜகவுக்கும் விழுகின்ற வாக்கு. ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தியது. அதைபோல சட்டமன்றத் தேர்தலிலும் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்த வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசி, வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved