திண்டுக்கல் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞரை 3 பேர் சேர்ந்து முதுகில் குத்தியும் காலால் எட்டி உதைத்தும் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. வேடசந்தூர் தனியார் நூற்பாலையில் பணிபுரியும் ஆரோக்கியசாமி தனது நண்பரான வடமதுரையை சேர்ந்த கிருஷ்ணனிடம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 8 ஆயித்து 500 ரூபாய் கடனாக பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் தனது நண்பர்களான சண்முகம், அருள்ராஜூடன் சேர்ந்து ஆரோக்கியசாமியை அடித்து உதைத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.