Also Watch
Read this
Posted on: Apr 19, 2025 01:37 AM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் முன்பு திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு நிலவியது.
இருக்கன்குடியில் அங்கன்வாடி மையமும், நத்தத்துப்பட்டியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியையும் திறந்து வைக்க அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்றார்.
அப்போது, முதலில் எதை திறக்க வேண்டும் என்பதில் நிர்வாகிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அவர்களை சமாதானம் செய்த அமைச்சர் முதலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
இதனையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்து வைக்க சென்ற இடத்திலும், அமைச்சர் வருவதை தனக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என கூறி நிர்வாகிகள் வாக்குவாதம் செய்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved