தமிழ்நாட்டில் இன்னும் சாதிய பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டு தான் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் தொழிலதிபர் ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் போன்றவர்கள் ஜாதிய பெருமை பேசக்கூடிய படங்களை எடுப்பதில்லை என்றதுடன், சாதிய கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கக்கூடிய கருப்பொருளை மையமாக வைத்து தான் அவர்கள் படங்கள் எடுப்பதாக கூறினார்.