பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்ற த.வெ.க தலைவர் விஜயுடன் திமுக தொண்டர் Selfie எடுத்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தவெக மாநாட்டிற்கான அனுமதி விவகாரத்தில் அக்கட்சி மற்றும் திமுக நிர்வாகிகள் இடையே கருத்து மோதல் இருக்கும் சூழலில், விஜய் உடன் திமுக தொண்டர் செல்பி எடுத்துக் கொண்டது பேசுபொருளாகி உள்ளது.