நகர்ப்புற வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக தேவையான நிதியை ஒதுக்கி உள்ளதாக பேசிய அமைச்சர் கே.என். நேரு எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது பேரூராட்சிகளுக்கு பணமே வராது என்றார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகங்கள் மற்றும் கலைஞர் அலங்கார வளைவை அமைச்சர்கள் கே.என் .நேரு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.