திருச்சி மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோ, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக வலியுறுத்துவேன் என கூறினார்.