சபரிமலை சீசன் காரணமாக, நேந்திரன் வாழை விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள தென்திருப்பதி நால்ரோடு அருகே செயல்படும் வாழைக்காய் மண்டியில் கதளி, நேந்திரன், பூவன், தேன் வாழை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் விற்பனைக்கு வந்தன. கதளி கிலோ 30 முதல் 35 ரூபாய் வரையும், நேந்திரன் கிலோ 55 முதல் 57 ரூபாய்வரையும் ஏலம் போனது. சபரிமலை சீசன் என்பதால் கேரளாவில் நேந்திரன் வாழைக்கு கிராக்கி இருப்பதால் கடந்த 3 வாரங்களாக அதிகபட்சம் கிலோ 60 ரூபாய் வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.