தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். செக்காரக்குடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட தரைப்பாலம், மழைநீரில் அடித்து செல்லப்பட்டது.