திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். நன்னிலம் அடுத்த பூரத்தாழ்வார்குடி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனை நேரில் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ, மக்களை முகாம்களில் தங்க ஏற்பாடு செய்தார்.