தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் எடுத்த முடிவு, அவரது எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அக்கூட்டணியில் இருப்பவர்கள் ஒவ்வொருவராக வெளியேறுவார்கள், இரண்டே பேர் தான் மிஞ்சுவார்கள் என தான் முன்பே கூறியதை போல் தற்போது நடப்பதாக கூறினார்.