ஆனைமலை அடுத்த மணல்மேடு அருகே தாறுமாறாக வந்த கார் சாலையோரத்தில் தலைக்குபுற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை கரப்பான் பூச்சி போல் கவிழ்த்து விட்டு விபத்துக்குள்ளாக்கிவிட்டு, காரை ஓட்டி வந்த மதுபோதை ஆசாமி ஒய்யாரமாக சாலையோரத்தில் குறட்டை விட்டு தூங்கியது அப்பகுதி மக்களை எரிச்சலுக்குள்ளாக்கியது. இருசக்கர வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார்பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் நேற்று மாலை பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் நோக்கி வேகமாகவும், தாறுமாறாகவும் கார் ஒன்று வந்துள்ளது. திடிரென நிலை தடுமாறி வந்த கார் வலது புறம் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.சாலையோரம் குறட்டை விட்டு தூங்கிய நபர்பின்னர் காரில் இருந்த நபர் போதை தலைக்கேறிய நிலையில் வெளியேறி சாலையோரத்தில் குறட்டை விட்டு படுத்து அங்கிருந்த பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் சாலையோரம் கவிழ்ந்து இருந்த காரை கிரேன் மூலம் மீட்டு கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். எதிரே எந்த வாகனம் வராததால் பெரும் விபத்து தவிர்ப்புதலைக்கேறிய போதையில் இருந்த நபர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதி சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், இவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. தாறுமாறாக கார் வந்த நேரத்தில் எதிரே எந்த வாகனம் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Related Link கடுப்பில் உலாவரும் ஊசிக்கொம்பன்