Also Watch
Read this
By: Manigandan Raja

இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் :
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மடத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராஜகோபால் இவர் மகன் பாஸ்கரன்(29) பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பேப்பர் மில்லில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்கரன் தாயார் விசாலாட்சி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அதற்கு 16ம் நாள் காரியம் நேற்று நடைபெற இருந்தது இதற்காக பொருட்கள் வாங்க பாஸ்கரன் மற்றும் அவரது மனைவி பிரியங்கா 11 மாத குழந்தை மற்றும் அவரது சகோதரி உள்ளிட்டோர் காரில் உடுமலைக்கு சென்றனர்.
அங்கு பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் காரில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர் அப்பொழுது கார் விபத்தில் சிக்கியதில் பாஸ்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மற்றவர்கள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் பாஸ்கரன் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர் அப்பொழுது அவரது குடும்பத்தினர் பாஸ்கரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன் வந்தனர்.
இதை தொடர்ந்து பாஸ்கரன் கண், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பாகங்கள் தானமாக அளிக்கப்பட்டது. இதன் மூலம் மூன்று பேர் மறுவாழ்வு பெற்றனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் உடல் உறுப்புகள் தானம் செய்த வாலிபரின் உடலுக்கு கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மடத்தூரில் இல்லத்தில்உடுமலை வருவாய் கோட்டாட்சியர் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும் பாஸ்கரின் உறவினர்கள் சாலை விபத்தில் மூளை சார்ந்த பாஸ்கரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் மடத்துக்குளம் அருகே 16-ம்நாள் காரியத்திற்கு பொருட்கள் வாங்க சென்ற வாலிபர் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved