திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை அர்ப்பணித்து நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, கழக இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாநகர அமைப்பாளர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.திமுகவில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லைஇதுகுறித்து முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இளம் வயது முதல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்து வந்தபோதும், சமீப காலங்களில் உரிய அங்கீகாரம் கழகத்தில் கிடைப்பதில்லை என்பது மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கழக தோழர் பணிக்குழு செயலாளராக இருந்த திருமதி ராஜம் ஜான் கழகத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றிய போதிலும், அவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், அவர்களுக்குப் பின்னர் கழகத்தில் சேர்ந்த பலர் இன்று கழகத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் பல்வேறு பொறுப்புகளை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தன்மானத்திற்கும், சுயமரியாதைக்கும் பேரிழப்புஇத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பேரறிஞர் அண்ணாவையும், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரையும் பின்பற்றி அரசியலில் பயணித்து வந்த தமக்கு இது தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் பேரிழப்பாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து, தாம் வகித்து வந்த கழக இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாநகர அமைப்பாளர் பதவியிலிருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார். Related Link வெற்றியை தலைவர் கரங்களில் ஒப்படைப்போம்