வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட முகாமில் நிரம்பி வழிந்த கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஒழுங்குபடுத்தினார். முகாமில் பதிவு செய்யும் இடத்தில் ஒரே நேரத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கூடியதால், பணி செய்ய முடியாமல் அதிகாரிகள் திணறினர்.