Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோழர்கால பெண் உருவ சுடுமண் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன. பைத்தாம்பாடி தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்ட போது இந்த பொம்மைகள் கண்டறியப்பட்டன.
5 சென்டிமீட்டர் உயரமுள்ள பொம்மைகளின் முகம் ஆந்தை முகம் போல் உள்ளது.1996 ஆண்டு விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த சுடுமண் பொம்மை போலவே இந்த பொம்மைகளும் உள்ளதால் அதே காலத்தை சேர்ந்த மக்கள் தென்பெண்ணை கரையோர பகுதிகளிலும் வாழ்ந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved