பள்ளியில் முதலீடு செய்தால் பங்குத் தொகை பல மடங்கு கிடைக்கும் எனக் கூறி தருமபுரி கிரீன் பார்க் INSTITUTION நிறுவன தாளாளர் 12கோடி ரூபாயை மோசடி செய்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது.கோடி கோடியாக பணத்தை அடிக்க, வட்டார கல்வி வளர்ச்சி அலுவலரையே புரோக்கராக பயன்படுத்தி வந்தது அம்பலமான நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கிய காவல்துறை, தலைமறைவான தாளாளரை வலைவீசி தேடி வருகிறது.