தர்மமே இல்லாதவருக்கு தர்மேந்திர பிரதான் என பெயர் வைத்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழ்நாட்டில் காலாவதியானது இருமொழி கொள்கை அல்ல, பாஜக தான் என கடுமையாக சாடினார்.