திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இரண்டாம் நாள் உற்சவத்தில் பூத வாகனத்தில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானை தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாட வீதியைச் சுற்றி வந்த முருகப் பெருமானை அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் மனமுருகி வழிபாடு நடத்தினர்.