news-tamil-logo

3/14/2026, 11:54:09 PM

news-tamil-logo
more
Home districtnews முதலமைச்சருடன் ’வைப்’ செய்த தேவா, ஜீவா
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சருடன் ’வைப்’ செய்த தேவா, ஜீவா

நான் உங்கள் தேவா...

Posted on: Mar 14, 2026 07:01 AM

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன், இன்ஸ்டா ரீல்ஸ் செய்து, சிறுவர்கள் கலக்கி உள்ளனர்.

முதல்வரின் அலுவலகத்தில்...
"நான் உங்க தேவா. நம்மோடு சி.எம். சார் இணைந்து உள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லோரும் கேட்பீங்க. அதனால, சிஎம் சார் நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்’ என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனான தங்களது சந்திப்பை, அழகான கன்டென்டாக, சிறுவர்களான தேவாவும், ஜீவாவும் மாற்றி உள்ளனர்.

இந்த சந்திப்பு முதல்வரின் அலுவலகத்தில் நடந்தது.
பரபரக்கும் தேர்தல் மற்றும் அரசு பணிகளுக்கு இடையே சற்று இளைப்பாறும் வகையில், இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பிரபலங்களான சகோதரர்கள் தேவா, ஜீவாவை, தமது அலுவலகத்தில் சந்தித்து, அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது சிறுவர்கள் உடனான உரையாடலை, தமது சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார்.

சிறுவர்கள் குறித்தும், அவர்களின் குடும்பம் மற்றும் சமூக வலைதள வீடியோ குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ‘உங்களை உற்சாகப்படுத்த நேரில் அழைத்தேன்’ என, முதல்வர் ஸ்டாலின், சிறுவர்களிடம் கூறினார். சிறுவர்களின் கனவு குறித்தும் கேட்டறிந்தார்.

அரசுப் பள்ளியில் படிக்கும் சிறுவர்களிடம், பள்ளியின் செயல்பாடு, காலை சிற்றுண்டி மற்றும் சத்துணவு குறித்தும் கேட்டறிந்தார். இந்த சந்திப்பில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார். மேலும், சிறுவர்கள் தேவா மற்றும் ஜீவாவின் குடும்பத்தையும் சந்தித்தார்.

முதல்வர் உடன் கலக்கல்
இதுமட்டுமல்ல... "நான் உங்க தேவா, நம்மோடு சிஎம் சார் இணைந்து உள்ளார். அவர் சொல்லும் அட்வைஸை எல்லோரும் கேட்பீங்க. அதனால சிஎம் சார், நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்" என்று தேவா வீடியோவில் இன்ட்ரோ கொடுக்க, அப்போது, “உங்களின் ரீல்ஸ் வீடியோ உருவாக்கம் நன்றாக உள்ளது. அதற்காக எனது வாழ்த்துக்கள்.

படிப்பில் கவனம் செலுத்தவும். நீங்கள் கூறியது போல, உங்கள் கனவுப் பணியான ஆட்சியர், காவல் அதிகாரியாக வாழ்த்துகிறேன். உங்கள் கனவு நிறைவேற வேண்டும்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
8 hrs 0 min agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved